ஜியெம்:
ஆன்மீகம் என்பது விழிப்புடன் இருப்பது.
விழிப்பு என்பது உள்ளிருக்கும் அமைதியை அறிவது.
விழிப்பாக இருக்கும் போது இயல்பாக செயல் படுவாய்.
இயல்பாக இருத்தல் என்பது எவ்வித திணிக்கப்பட்ட அடையாளங்களும் இல்லாமல் சுய அறிவுடன் செயல்படுவது
உன் உன்னத நித்தியத்தை அறிய விழிப்பே திறவுகோலாகும்
விழிப்புடன் அமைதி நிலையில் இருந்தால் தடுமாற்றம் இன்றி துணிச்சலுடன், விவேகத்துடன் செயல்கள் இருக்கும்.
விழிப்பாக இருக்கும் போது நீ மிகவும் சுதந்திரமாக இருக்கிறாய்!
இங்கு சுதந்திரம் என்பது உள் நிலையில்…
ஏனெனில், இங்கு உன் சுய அறிவில் தான் அனைத்தும் நிகழ்கிறது.
சுய அறிவில் நிலைக்கும் போது அனைத்தில் இருந்தும் விடுபடுகிறாய்!
ஆன்மீகம் என்பது விழிப்புடன் இருப்பது மட்டுமன்றி , விழிப்பு தன் ஆதாரத்தை அறிவதுமாகும்!
🌹🌷🌹