ஜியெம்:
அத்துவிதம் என்பது இருமையை கடந்த நிலை!
பார்க்கும் நீ… பார்க்கும் இருமை நிலைக்கும் அப்பால்… எப்பொழுதும்!
பார்க்கும் நீ… எப்பொழுதும் பரிபூரணம்!
பார்க்கும் நீ… எப்பொழுதும் நித்தியம்!
பார்க்கும் உனக்கு… எப்பொழுதும் பாதிப்பில்லை.!
இருப்பினும் தற்போது உன் இருப்பை ‘நான் ‘ எனும் சுய அறிவின் வழியே அறிகிறாய்.!
இந்த சுய அறிவானது தன்னை ஒரு வடிவத்தின் வழியே ‘ நான் இருக்கிறேன்’ என அறிவதால், தன்னையும் ஒரு வடிவமாகவே ஒப்புக் கொள்கிறது.
வடிவமாக ஒப்புக் கொள்ளும் போதே, வடிவத்தைச் சார்ந்த பல்வேறு அடையாளங்களையும் தனதாகவே ஒப்புக் கொள்கிறது.
உன் சுய அறிவு…தான் சுய அறிவு என்றும்…வடிவம் வழியே தன் இருப்பை அறிந்தாலும்… தான் வடிவத்திற்கு அப்பாற்பட்ட…பரந்த, விரிந்த, எல்லை அற்ற நிலையில் இருப்பதை… அறிவதில்லை.
எனவே, இங்கு வடிவ அளவில் காணும் அனைத்தும் நிஜம் என ஒப்புக் கொள்கிறது….தன் முழுமையை அறிந்த குருவைக் காணும் வரை…
இருமையில் நிகழும் அனைத்தும்… பிரபஞ்சம், கோள்கள், அகிலம் ஆகியவை தானாகவே ஒளியில் அணுக்களின் தொடர்வினையில் நிகழ்கிறது என்பதை அறிவதில்லை.
அனைத்தும் ஒளியின் பிரதிபலிப்பே அன்றி… இங்கு எதுவும் நிகழ வில்லை எனவும், காண்பது கனவு நிலையே அன்றி… நிஜம் இல்லை எனவும் அறிவதில்லை.
இங்கு காணும் அனைத்திற்கும் ஆதாரம்… ஒளியும்… அவ்வொளியில் தானாகவே நிகழும் அணுக்களின் விளையாட்டும்… என அறிவதில்லை.
எனவே, இங்கு தானாகவே நிகழும் வடிவ அளவு விளையாட்டை… நிஜம் என ஒப்புக் கொண்டு தடுமாறுகிறது…
காணும் கனவு விழிக்கும் வரை நிஜமாக உள்ளது போல், இங்கு பரத்தில் நிகழும் நிகழ்வுகள் நிஜமாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.
நிஜம் அற்ற கனவு நிலை – இருமை நிலையில்.
இருமை நிலையில் அனைத்து நிகழ்வுகளும் மாறிக்கொண்டே இருக்கிறது.
மாறுவது நிஜம் ஆகுமா?
நிஜம் என்பது மாற்றமில்லாதது.!
எனில், இங்கே இருமை நிலையில் எது நிஜம்?
இந்த இருமை நிலையில் காணும் அனைத்தும் நிஜம் அற்ற கனவே!
இதை அறிய தனித்த அடையாளத்தில்… உறங்கிக் கொண்டே கனவு காணும்… உன் சுய அறிவு தான் காணும்… வடிவ அளவு கனவில் இருந்து… முற்றிலும் விழித்து… தன் உன்னதத்தை, வடிவத்திற்கு அப்பாற்பட்ட தன் நித்திய பரிபூரணத்தை… அறிதல் அவசியமாகிறது.
கண்களை மூடி முதலில் சலனமற்ற அமைதியில் நிலை கொண்டு…சுய அறிவானது அவ்வமைதியில் நீடித்து…. இருமை நிலையை கடக்கிறது…
தன் பிறவா நிலையை அறிகிறது.
பிறவாத ஒன்றுக்கு ஏது இறப்பு?
பிறப்பு, இறப்பு என்பது முற்றிலும் கனவே.!
ஒரு துளியும் நிஜம் இல்லை என அறிகிறது.
இருமை எனும் நிஜம் அற்ற கனவில் இருந்து விழித்து ….
இருமைக்கு அப்பாற்பட்ட தன் எல்லை அற்ற அளவிலா, விளக்க முடியா ஆனந்தத்தை அறியும் வரை….
இருமை நிலையில் தானாகவே நிகழும் கனவுகள்… நிஜமாகவே ஒப்புக் கொள்ளப் பட்டு… தடுமாறும்…தன்னை…தன் பிறவாத முழுமையை அறியும் வரை…!
இப்பொழுது சொல்லவும்…!
இங்கு இருமை நிலையில் காணும் அனைத்து தடுமாற்றங்களுக்கும்… தீர்வு எங்கு உள்ளது?
விழிப்பில் தானே?
விழித்தால்…எல்லை அற்ற நித்திய பரிபூரணம்….
அத்துவிதத்தில்… பார்க்கும் நீ மட்டுமே.!
பார்ப்பது அனைத்தும் கனவே!
இருமை நிலையில் இருந்து விழித்து,தன் அற்புத உன்னதத்தை, முழுமையை அறிவதே… அனைத்து தடுமாற்றங்களுக்கும் ஒரே தீர்வு!
அறியவும் அவசியம் இதனை!
விழிக்கவும் தற்போதே.!