" நீயே பரிபூரண நித்தியம் "

கே: ஜியெம், விழிப்பு நிலை , விழித்த நிலை விளக்கவும்.!

October 11, 2024 | 21 views

ஜியெம்:

கண்களை திறந்து பார்த்தல் – விழித்த நிலை!

கண்களை மூடி உள்ளிருக்கும் அமைதியை அறிதல் – விழிப்பின் ஆரம்ப நிலை.

விழித்த நிலையில் அடையாளங்கள் மட்டுமே!

விழிப்பில் அமைதி மட்டுமே!

விழித்த நிலையில் காணும் கனவும் நிஜமே!

விழிப்பில் பார்க்கும் ‘தான்’ மட்டுமே நித்தியம்!

விழித்த நிலையில்….ஒளியின் பிரதிபலிப்பு!

விழிப்பில்…..ஒளிக்கும் அப்பால்…

பார்ப்பவர் மட்டுமே!

விழித்த நிலையில்…..
காட்சிகள் பரவெளிக்குள்!

விழிப்பில்….
பார்ப்பவர் பரவெளிக்கும்…அப்பால்…

விழித்த நிலையில் …
பிறப்பு இறப்பு எனும் கனவு நிலை….( இருமை நிலை)

விழிப்பில்…. பிறப்பில்லை…இறப்புமில்லை! (இருமை அற்ற நிலை)

அமைதியில் நிலைத்து தன் ஆதாரத்தை, பிறவா நிலையை அறிதல் – முழுமையான விழிப்பு.

விழிப்பு என்பது காணும் கனவு நிலையில் இருந்து விழிப்பதே!

விழித்த நிலை முற்றிலும்….
விழிப்புடன் இருந்தால்….

காணும் கனவில் இருந்து
தற்போதே முற்றிலுமாக

விழிக்கலாம்..!
அறியலாம்…!

தன் பிறவா அற்புதத்தை…!
இருந்து கொண்டே …
இருக்கும் நித்தியத்தை.!

தற்போதே..!

🌷🌸🌷v