" நீயே பரிபூரண நித்தியம் "

வணக்கம் ஜியெம்.! எனது பிறப்பு , தொழில், அனைத்து செயல்களும் ….. இறப்பும்….ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதா? அனைத்து நிகழ்வுகளும் கர்மாவின் படி தான் நிகழ்கிறதா? கர்மா என்றால் என்ன? நான் இவை பற்றி மிகவும் தெளிவில்லாமல் இருக்கிறேன். எனக்கு தெளிவாக விளக்கம் தருவீர்களா?

March 20, 2022 | 144 views

என்னுடைய கேள்வி:

பிறப்பு யாருக்கு?

கர்மா என்றால் என்ன?

வடிவம் என்பது என்ன?

அனைத்தும் எதில் உள்ளது?

நீ எதுவாக இருக்கிறாய்?

எதை பார்க்கிறாயோ அவை நிஜமா? நிஜம் இல்லையா?

நீ பிறந்தாயா?

உன் அறிவு தான் இதை படிக்கிறது.

சுய அறிவு (Consciousness) இன்றி இதைப்படிக்க இயலுமா?

உன் இருப்பு உனக்கு எப்படித் தெரிகிறது?

முதலில் உன் சுய அறிவு தோன்றுகிறது.

உன் சுய அறிவில் அனைத்தும் தோன்றுகிறது, உனது வடிவம் உட்பட….

உன் சுய அறிவின்றி இங்கு எதுவும் இல்லை.
அனைத்து படைப்பும் உன் சுய அறிவில் …
சுய அறிவால்…
இயங்குகிறது.

நான் என்பதே சுய அறிவு தான்.
இதையே அறிவு என நான் அழைக்கிறேன்.

அறிவு என்றாலே சுய அறிவு தான் இங்கே!

இதை புரிந்து கொள்ளவும்.

பொருள் சார்ந்த அறிவு நீ அல்ல!

அதை நான் பொருட்படுத்துவதுமில்லை.

என் போதனைகள் அறிவாகிய சுய அறிவுக்கே.

அனைத்து செயல்களும் அறிவால் இயங்கும் போது இங்கே செய்பவர் யார் உளர்?

அனைத்து வடிவங்களும் அறிவின் படைப்பே!

அறிவே வடிவத்தைப் படைத்து, வடிவங்களின் வழியாக இயங்குகிறது..

இப்பொழுது சொல்லவும்…
இங்கே கர்மா எது?
கர்மா என்பது செயல்தானே?
அனைத்து செயலும் அறிவாலே…

மூச்சு விடுதல், இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம், வளர் சிதை மாற்றம் போன்ற அனைத்து செயல்களும், தானாகவே உன் ‘நான்’ எனும் அறிவில் நடைபெறுகிறது….

உன் அறிவே படைக்கிறது!
உன் அறிவே செயல்படுகிறது!
இங்கு யார் இருக்கிறார்கள்?
உன் அறிவைத் தவிர!

உன் அறிவே தன்னை வடிவமாக ஒப்புக் கொள்வதால், தான் பிறந்ததாகவும், தனக்கு இறப்பு உண்டு என்றும் ஒப்புக் கொள்கிறது……

உன் அறிவுக்கு தான் ‘அறிவு ‘ என்பதும், தன் அறிவில் தான் அனைத்தும் தோன்றுகிறது தனது வடிவம் உட்பட…. எனவும் தெரிவதே இல்லை.

நான் சொல்கிறேன்!
நீ என்றென்றும் இங்கு இருந்து கொண்டே இருக்கிறாய்!
நீ பிறப்புக்கும், இறப்புக்கும் அப்பாற்பட்ட நித்தியம்!
உனக்கு இங்கு எதுவும் நிகழவில்லை!
நீ உன்னதம்! அற்புதம்!

அறிவுடன் விழிப்பாக இருந்து… விழித்து ….உன் உன்னத பிறவா நிலையை அறிவாய்….இப்போதே!

உன் விழிப்பின் வழியாக பிறப்பு, வடிவம், கர்மா, எண்ணங்கள், உலகம் மற்றும் அனைத்து இத்யாதிகளும்…… இறப்பு உட்பட… கனவே…என அறிவாய் !

இப்பொழுது தெரியும் நீ ஏன் அறிவாக இருந்து விழிக்க வேண்டுமென….

ஏனெனில், நீ பிறப்பு , இறப்பு எனும் கனவை, கர்மா மற்றும் இதர இத்யாதிகள் நிஜம் என நம்புகிறாய்…

உண்மையை தேடும் அறிவானது எனது போதனைகளை முழுமையாக கவனித்தால் விழிப்பு நிச்சயம்!

அப்பொழுது தான்…கர்மா, சென்ற பிறவி, மறு பிறவி போன்றவை நிஜம் அல்ல என புரியும்.

முதலில் இந்த பிறவியே நிஜமா ? இல்லையா? என கண்டு பிடிக்கவும்.