" நீயே பரிபூரண நித்தியம் "

எது அறிவு?

March 22, 2022 | 179 views

அறிவு என்பது பொருள் சார்ந்தது அல்ல!

தன்னைப்பற்றிய அறிவு!

தன் இருப்பைப்பற்றிய அறிவு!

அமைதியில் உன் இருப்பு உனக்கு தெரியும் அல்லவா?

இந்த இருப்பை பற்றிய அறிவு.

‘நான் இருக்கிறேன்’ அமைதி நிலையில் என்கிற அறிவு.

‘நான் இருக்கிறேன்’ எனும் வார்த்தைகள் அற்ற அறிவு தான் முதன்மை அறிவு.

இதுவே சுய அறிவு (I amness Consciousness)

இந்த சுய அறிவில் தான் ஏனைய பொருள் சார்ந்த அறிவு பெறப்படுகிறது.

சுய அறிவு மிகவும் ஆற்றல் வாய்ந்தது.

சுய அறிவில் தான் பிரபஞ்ச படைப்பே அடங்கி உள்ளது.

சுய அறிவில் தான் அனைத்து உயிரினங்களும் தோன்றுகிறது….

சுய அறிவின்றி இங்கு யாதும் இல்லை.

இந்த சுய அறிவு… தன்னில் நிலைத்து இருந்தால் அமைதியும் ஆனந்தமும் அறியப்படும்.

என்னுடைய போதனைகள் அனைத்தும் சுய அறிவுக்கே!

இதைத்தான் நான் அறிவு என்று சொல்லுகிறேன்!

அறிவு என்றாலே சுய அறிவு தான் இங்கே!

ஏனைய பொருள் சார்ந்த அறிவு அனைத்தும் துணை அறிவே!

துணை அறிவு உபயோகத்திற்கு மட்டுமே!

துணை அறிவு அமைதியை அறியாது.

முதன்மை அறிவில், அமைதியை அறியலாம்.

அறிவு என்றாலே சுய அறிவு தான்.

சுய அறிவே முதன்மை அறிவு!