ஆனந்தம்!
இங்கு நான் என்பது சுய அறிவே!(Consciousness)
பொருள் சார்ந்தது அல்ல!
சுய அறிவு என்பது அமைதியில் தன் இருப்பை அறிவது.
அமைதியில் உன் இருப்பு உனக்கு தெரிகிறது.
இந்த அமைதியான சுய அறிவே காணும் அனைத்திற்கும் மையம்.
சுய அறிவில் தான் ஏனைய அனைத்து அறிவும் பெறப்படுகிறது.
அமைதியில் தங்கி தன் இருப்பிலேயே நிலைக்கும் போது சுய அறிவு விழிக்கத் தொடங்குகிறது…!
நான் என்பது பெயரோ, மற்ற அடையாளங்களோ அல்ல!
என்னுடைய போதனைகள் அனைத்தும் சுய அறிவு பற்றியே!
இங்கு நான் என்பது சுய அறிவே!
வார்த்தைகள் அற்ற நிலையில் தன் இருப்பை அறிவது.
உன் இருப்பில் தான் அனைத்தும் நிகழ்கிறது…..
இருப்பில் நிலைத்து, இருப்பின் ஆதாரத்தை அறியவும்…..
அறிந்தால் ஆனந்தமே!