அனைத்தும் படக்காட்சிகளே!
இங்கு தோற்றங்கள் நிஜமாக இருந்தாலும் அதில் நிஜம் இல்லை!
இது மாயை அல்ல!
நிஜம் அற்றது!
உன் சுய இருப்பில் இருந்து தோற்றங்கள் வெளிப்பட்டாலும், அவை நிஜம் அல்ல!
தோற்றங்களே நிஜம் அற்றது தான்!
ஏனெனில் அவை அனைத்தும் ஒளியின் பிரதிபலிப்பே!
தோற்றத்தில் மயங்காமல், தோற்றத்தை இயக்குவது உன் சுய இருப்பே என அறிதல் அவசியம்!
சுய இருப்பில் மையம் கொண்டால் பார்ப்பது புரிந்து விடும்!
இருக்கிறது… அதில் நிஜம் இல்லை!
பிரதிபலிப்பு நிஜம் ஆகுமா?
சுய இருப்பு தற்போதைய நிஜம்….!
இருப்பில் தோன்றும் அனைத்தும் பிரதிபலிப்பே!
சுய இருப்பில் நிலைத்தால் பிரதிபலிப்பு என அறியலாம்!
எல்லையற்ற உன் இருப்பில் வடிவங்கள் தோன்றி மறைகிறது!
இருப்பில் தோன்றும் காட்சிகள் அனைத்தும் படக்காட்சிகளே!
நிஜமற்றது!
சுய அறிவில் செயல்பட்டால் விரைவில் விழிக்கலாம்!
இங்கு விழிப்பது அறிவே!
வடிவம் அல்ல!
வடிவங்கள் அறிவில் தோன்றி மறைகிறது!
அறிவு தான் வடிவங்களை இயக்குகிறது!
(அறிவு= சுய அறிவு (I amness Consciousness), திணிக்கப்படும் அறிவல்ல!)